சேலம்: சேலம், அம்மாபேட்டை மண்டலத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டப்பணி நடக்கிறது. இதில் சேதமடைந்த சாலைகளை, சீரமைக்கும் பணி நடக்கிறது. நாராயணன் நகர், 6வது குறுக்கு தெரு, காளிதாசர் தெருவில் நடக்கும் சாலை பணியை, கமிஷனர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: புது சாலை அமைக்கும் போது, அரசு வழிகாட்டுதல்படி, ஏற்கனவே சேதமடைந்த சாலைகளை, 23 செ.மீ., ஆழத்துக்கு தோண்டி எடுக்க வேண்டும். பின், 15 செ.மீ., உயரத்துக்கு, 'எமிசான்ட்' கலந்த பெருஜல்லி பரப்ப வேண்டும். 5 செ.மீ., உயரத்துக்கு தார்கலவை போட வேண்டும். மூன்றாம் கட்டமாக, 3 செ.மீ., உயரத்துக்கு சிறு ஜல்லியுடன் கூறிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.