சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 1,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 502 பேர், ஓமலூர், 50, வீரபாண்டி, ஆத்தூர் தலா, 46, தாரமங்கலம், 38, சேலம் ஒன்றியம், 37, மகுடஞ்சாவடி, கெங்கவல்லி, மேட்டூர் நகராட்சி தலா, 34, காடையாம்பட்டி, சங்ககிரி தலா, 30, பெத்தநாயக்கன்பாளையம், 29, தலைவாசல், 26, வாழப்பாடி, 22, கொளத்தூர், மேச்சேரி தலா, 20, இடைப்பாடி, 19, பனமரத்துப்பட்டி, 15, கொங்கணாபுரம், 14, அயோத்தியாப்பட்டணம், 13, நங்கவள்ளி, 8, ஆத்தூர் நகராட்சி, 7, ஏற்காடு, 4, நரசிங்கபுரம் நகராட்சி ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 1,079 பேர், நாமக்கல்லை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இது, கடந்த, 17ல், 466 பேர், 18ல், 532 பேர், 19ல், 785 பேர், 20ல், 937 பேர், 21ல், 1,009 பேர் என அதிகரித்து, நேற்று மூன்றாம் அலையில் புது உச்சமாக, 1,080 பேர் பாதிக்கப்பட்டனர்.
புது கட்டுப்பாடு: சேலம் அரசு மருத்துவ கல்லூரி டீன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொற்று அதிகமாகி வருவதால், மருத்துவமனையில் உள் தங்கும் நோயாளிகளுடன், தலா ஒரு உதவியாளர் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதற்காக, தனியாக பாஸ் வழங்கப்படும். அதேநேரம், உதவியாளர் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் அனுமதி கிடைக்கும். அத்துடன் முக கவசம் அணிவதோடு கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். போதிய இடைவெளி விட்டு உதவியாளர் தங்கியிருக்க வேண்டும்.55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: சேலம் மாவட்டத்தில், 1,392 மையங்களில், 19வது மெகா தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது. அதில், மாநகராட்சியில், 10 ஆயிரத்து, 610 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில், 28 ஆயிரத்து, 552 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 16 ஆயிரத்து, 192 பேர் என, 55 ஆயிரத்து, 354 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.