கோழி விற்பனை பாதிப்பு: ஊரடங்கால் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
23:08

பல்லடம்:ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போது, கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்து, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. வாரம் ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.பண்ணையாளர்கள், கூலித் தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என, இத்தொழிலை நம்பி, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், பயனடைந்து வருகின்றனர். ஞாயிறு ஊரடங்கு காரணமாக, கறிக்கோழி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பண்ணையாளர்கள் கூறுகையில், 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான விற்பனை நடப்பதால், இதைப் பொறுத்தே கறிக்கோழிகள் விற்பனை அதிகரிக்கும். ஞாயிறு தோறும் ஊரடங்கு அமல்படுத்தியதால், கறிக்கோழிகள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கோழிகள் ஊட்டச்சத்து மிக்க உணவு என, மத்திய அரசு அறிவித்துள்ளபோதும், கோழி விற்பனைக்கு அனுமதிக்காதது கவலை அளிக்கிறது. இதனால், கறிக்கோழி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, ஞாயிறு ஊரடங்கின்போது, கறிக்கோழி விற்பனைக்கு அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X