ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக தட்சிணாமூர்த்தி மகன் பார்த்திபன் 27, பணிபுரிகிறார். இவர் சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி., நகரில் மின்தடை ஏற்பட்டதால், அங்குள்ள மின் டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல்திடீரென மின் வினியோகம் வந்தது.இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். பார்த்திபனின் இடது கை, கால்களில் காயம் ஏற்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.