திருப்பூர்:திருப்பூரில், மூன்று இடங்களில் நடந்த விபத்தில், மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 35; லாரி டிரைவர். நேற்று முன்தினம் கரூரில் இருந்து தாராபுரம் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார்.தாராபுரம் ரோடு, முத்து கவுண்டன் வலசு பிரிவு அருகே சென்ற போது, எதிரே வந்த கன்ெடய்னர் லாரி, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில், ராஜேஷ் ஓட்டி வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்து, லாரி ரோட்டின் பள்ளத்தில் இறங்கியது. இதில், ராஜேஷ் பலியானார்.மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.l திண்டுக்கல், சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார், 32. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தங்கி பெயின்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அறைக்கு திரும்பி கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத வாகனம், சரவணக்குமார் மீது மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.l திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயாவில், 50 வயது மதிக்கத்தக்க, ரோட்டோரம் வசித்து வரும் நபர் நேற்று முன்தினம் இரவு ரோட்டில் நடந்து சென்றார்.அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அந்த நபர் மீது மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.