ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் 860 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இங்கு 1982ல் மீன்இறக்கும் பாலம் அமைத்த நிலையில், இதனை பராமரிக்க மீன்துறையினர் முன்வராமல் அலட்சியமாக இருந்தனர்.
பாலத்தில்துாண்கள் சேதமடைந்தும்,சில இடத்தில் சாலை உடைந்து கடலில் விழும் நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது.பாலத்தை பராமரிக்க மீனவர்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் மீன்கள், வலைகளை ஏற்ற டிராக்டர், லாரிகள் வந்து செல்வதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.