தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே முத்து ரெகுநாதபுரம் விலக்கில் தேவிபட்டினம்ஊராட்சி குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் குப்பைகள், பல நாட்களாக தேங்கிக்கிடப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், லேசான காற்று அடித்தாலே பிளாஸ்டிக் குப்பை காற்றில் பறந்த வண்ணம் உள்ளன. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்,காற்றில் பறந்து வரும் குப்பை கழிவுகளால் சிரமப்படுகின்றனர்.