ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.24, 25ல் நடக்க இருந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி 28, 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. மேலும் தனுஷ்கோடி, காரங்காடு, வாலிநோக்கம், மணாலி தீவு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.முதலில் ஜன.,24, 25ல் நடக்க திட்டமிடப்பட்ட கணக்கெடுப்பு பல்வேறு காரணங்களால்28, 29க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 27ல் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும், என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.