கீழக்கரை : ஏர்வாடி காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் முகைதீன். இவரது மகன் நுார்முஹம்மது 7.இவர் தனது தாயார் சஜிராபேகத்துடன் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள பெரிய ஊரணியில் குளிக்க சென்றுஉள்ளார். தாயார் சஜிரா பேகம் கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் நுார்முகமது ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிர்ழந்தார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.