உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில்2018ல் திருப்பணி, புனரமைப்பிற்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலை பூஜை, வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடந்தது.மூலவர் வராகியம்மன், மங்கை மாகாளியம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று பக்தர்கள் இன்றி விழா நடந்தது.