மானாமதுரை : கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்திய நிலையில் இறைச்சிக் கடைகள் செயல்படுவதாக மானாமதுரை நகராட்சி ஆணையாளர் கண்ணனுக்கு தகவல் வந்தது. சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் நகராட்சி பணியாளர்கள் சோதனை செய்த போது அனுமதியின்றி செயல்பட்ட 6 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.மேலும் ஒரு மீன் கடையில் கெட்டுப் போன 15 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.