சிவகங்கை : சிவகங்கை காந்தி வீதியில் திறந்தவெளி சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. பக்கச்சுவர் உடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.சிவகங்கையில் வணிக நிறுவனங்கள் நிறைந்த காந்தி வீதியில் கழிவுநீர் திறந்தவெளி சாக்கடையில் செல்கிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.சாக்கடையை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.