மானாமதுரை : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் காவல்துறை விசாரணைக்கு சென்றபோது மரணமானதை தொடர்ந்து அவரது மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் மானாமதுரையில் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் சார்பில் மாநிலத் தலைவர் நாகூர்மீரா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.நிறுவனர் ராதிகா முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் சுதர்சன்,செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பாலாஜி, நிர்வாகிகள் திருவாசகம்,கிருஷ்ணன்,ஆனந்தி,நாகராஜ் கலந்து கொண்டனர்.