நாய்கள் தொல்லைஇடையர்பாளையம் பிரிவு, மணிகண்டன் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுசிலா, மணிகண்டன் நகர்.
புதரை அப்புறப்படுத்தணும்!காந்திபார்க், ரத்தினசபாபதிபுரம் ரவுண்டானா புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் அழகிய செடிகள் வளர்த்தால் பார்க்க நன்றாக இருக்கும்.- மணிகண்டன், காந்திபார்க்.
நாய்களால் பீதிசிங்காநல்லுார், கே.பி.ஆர்.லே., அவுட், என்.ஆர்.ஆர்., லே அவுட் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக, தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.- தீபக்குமார், சிங்காநல்லுார்.
பழுதடைந்த மின்கம்பம்பீளமேடு, 39வது வட்டம், கட்சம நாயுடு வீதியில் உள்ள மின்கம்பம் ஒன்று மிகவும் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது. விபரீதம் ஏற்படுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.- தியாகு, பீளமேடு.
வாகனங்களால் நெரிசல்சூலுார், பழைய பஸ் ஸ்டாண்ட், அருகில் தனியார் மருத்துவமனை உள்ளது. மருத்துவமனைக்கு வருவோர் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- மணிகண்டன், சூலுார்.
எரியாத விளக்குகள்கோவை, மீனாட்சி கார்டன் பகுதியில் அமைந்துள்ள தெரு விளக்குகள், பல நாட்களாக எரியாமல் உள்ளது. அதிகாரிகள் அவற்றை சீரமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.- வெங்கடநாராயணன், கோவை.
குப்பை அள்ளணும்உக்கடம், ரங்கே கவுடர் வீதியில் சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. ஆனால், நிரம்பிய குப்பையை அப்புறப்படுத்த ஆட்கள் வருவதில்லை.- சதீஸ்குமார், ரங்கே கவுடர் வீதி
குடிநீரில் கலப்படம்சித்தாபுதுார், சின்னசாமி நாயுடு லே அவுட் பகுதிக்கு, குடிநீர் பிரச்னை பல மாதங்களாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதிலும், குடிநீரில் உப்பு தண்ணீர் கலந்து வினியோகம் செய்யப்படுகிறது.- கண்ணன், சித்தாபுதுார்.
கீழே விழும் காய்ந்த கிளைகள்ரத்தினசபாபதிபுரம், திவான் பகதுார் சாலை, கென்னடி பேருந்து நிருத்தம் முன்பு பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் சிலகிளைகள் காய்ந்துவிட்டதால், அடிக்கடி கீழே விழுவதால் மக்கள் அச்சப்பட வேண்டியுள்ளது. காய்ந்த கிளைகளை மட்டும் அப்புறப்படுத்த வேண்டுகிறோம்.- ஆறுச்சாமி, ரத்தினசபாபதிபுரம்.
தெருநாய்கள் தொல்லைமாநகராட்சி, 52வது வார்டு, ஆர்.வி.என்., லே அவுட், திருவள்ளுவர் வீதி பகுதிகளில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மேலும், சாலையில் செல்வோரை கடிக்க துரத்துகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அருண், கோவை