இளையான்குடி : இளையான்குடி போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.க்கள் பார்த்திபன்,ஜான் கென்னடி மற்றும் சமூக ஆர்வலர் தப்பாத்தை சாகுல்ஹமீது ஆகியோர் இளையான்குடி பகுதியில் கொரானா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் கண்மாய்க்கரை, பஸ் ஸ்டாண்ட்,வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திடல் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.