தேவகோட்டை : தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேவகோட்டை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தியாகிகள் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, செயலாளர் வீரையா, நகர பா.ஜ., தலைவர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.