தரைப்பாலம் அமைக்க 25 ஆண்டாக போராடும் செவரக்கோட்டை மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
23:56

காரைக்குடி : கல்லல் ஊராட்சியில் இருந்து செவரக்கோட்டைக்கு தரைப்பாலம் அமைக்க வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.



கல்லல் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கல்லல் பகுதிக்கு செவரக்கோட்டை, பட்டணம்பட்டி, ஆவந்திபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.கல்லல் ஊராட்சியில் இருந்து காரைக்குடி மெயின் ரோடு வழியாக செவரக்கோட்டை செல்வதற்கு 6 கி.மீ., தூரம் ஆகிறது. செவரக்கோட்டையில் இருந்து மணிமுத்தாற்றை கடந்து செல்ல அரை கி.மீ., துாரமே உள்ளதால் மக்கள் கல்லல் ஊராட்சிக்கு செல்ல இந்த வழியை பயன்படுத்துகின்றனர். பயண நேரத்தை குறைக்கும் விதமாக, கடந்த 25 ஆண்டுகளாக மணிமுத்தாறின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முருகேசன் கூறுகையில்; கல்லல் ஊராட்சியில் இருந்து மணிமுத்தாறு வழியாக செவரக்கோட்டை நடுவிக்கோட்டை, பட்டமங்கலம், பட்டணம்பட்டி, திருப்புத்துாருக்கு மிக எளிதாக செல்ல முடியும். பெரும்பாலான மக்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றனர். 2018ல் நடந்த கிராமசபை கூட்டத்தில் தரைப்பாலம் அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தரைப்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X