கள்ளிமந்தையம் : தேனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த துணி வியாபாரி முருகேசன் 48. இரண்டு நாட்களுக்கு முன் டூவீலரில் ஒட்டன்சத்திரம் -- தாராபுரம் ரோட்டில் சென்றார். பெருமாள் கோயில் அரசு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது டூவீலரின் பின் டயர் வெடித்ததில் கீழே விழுந்தார். ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.