மேட்டுப்பாளையம்:திறந்தவெளிக் கிணற்றால், மோத்தேபாளையம் கிராம மக்களுக்கு, பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் அடுத்த, சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, மோத்தேபாளையம் அரிசன காலனியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள பொதுக்கிணற்றில், பாதி அளவுக்குத் தண்ணீர் உள்ளது.இக்கிணற்றில் இருந்து பொதுமக்கள் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்துவதில்லை. கிணற்றைச் சுற்றிலும் புதர் மண்டியுள்ளது.கிணற்றின் மேல் பகுதி, மூடப்படாமல், திறந்த நிலையில் உள்ளது. திறந்தவெளி கிணற்றால், பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.