மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் சபூர்தீன், 24, லாரி டிரைவர். இவரது, நண்பர் மேட்டுப்பாளையம் பழைய சந்தைக்கடையை சேர்ந்தவர் மாபு பாட்ஷா, 26; கார் டிரைவர்.இருவரும், இருசக்கர வாகனத்தில், கல்லாறில் இருந்து மேட்டுப்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர்.ஊட்டி சாலையில், முன்னாள் சென்று கொண்டிருந்த காரை, முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே மற்றொரு கார் வந்துள்ளது.இதில், நிலைதடுமாறி, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது, பைக் மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் ஹெல்மெட் அணியாததால், கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தனர்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், மாபு பாட்ஷா உயிரிழந்தார். சபூர்தீன், மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேட்டுப்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.