மதுரை : மதுரை பாரதி யுவ கேந்திரா, அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் திருமங்கலம் அருகே டி.குன்னத்துார் அம்மா கோயிலில் ஜன., 29 காலை 10:00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடக்கின்றன.
6 முதல் 8ம் வகுப்பு, 9 முதல் 10ம் வகுப்பு, பிளஸ் 1, 2 மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடக்கின்றன. தன்னிகரில்லா தலைமை பண்பு கொண்ட தலைவர்களின் சிறப்பு என்ற பொது தலைப்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து 7 நிமிடங்கள் பேசவேண்டும். ஒவ்வொரு பிரிவிற்கும்முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2வது பரிசாக ரூ.ஆயிரம், 3வது பரிசாக ரூ.500 வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும். ஏற்பாடுகளை டிரஸ்ட் செயலாளர் பிரியர்தர்ஷினி, கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்து வருகின்றனர். விவரங்களுக்கு 94426 30815.