கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே கார் - பைக் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பைக்கில் வந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.கிணத்துக்கடவு, கலைவாணர் வீதியை சேர்ந்தவர் ஆனந்த், 37, எலக்ட்ரீசியன். திருமணமானவர். நேற்றுமுன்தினம் மாலை, கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டிரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றார். லட்சுமிநகர் அருகே சென்றபோது, எதிரே வந்த கார், திடீரென பைக் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த், சிகிச்சைக்காக அருகில் இருந்தவர்களால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இருப்பினும், வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக இறந்தார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.