பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற, 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்ததுடன், மூன்று பேரை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு, ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில், பொள்ளாச்சி - நடுப்புனி செங்கணாம்பாளையம் பாலம் அருகே, போலீசார் வாகனச்சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வானம், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர்.இரண்டு வாகனங்களிலும், 50 கிலோ எடை கொண்ட, 40 வெள்ளை சாக்கு மூட்டைகளில், 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது.சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்த போது, பொள்ளாச்சியை சேர்ந்த ராஜாமன்சூர், 38, மணிகண்டன், 35, சக்திவேல், 36 ஆகியோர் என்பதும்; பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவதும் தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார், மூன்று பேரையும் கைது செய்து, 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.