பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 174 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி, 'சில்லிங்' விற்பனை நடைபெறுவது வழக்கமாகி உள்ளது.இந்நிலையில், கோட்டூர் ரோடு ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.சப் - இன்ஸ்பெக்டர் திருமலைசாமி மற்றும் போலீசார், பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அதில், விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.மது விற்பனைக்காக வைத்து இருந்த ஈரோட்டைச்சேர்ந்த தங்கமணியை, 21, போலீசார் கைது செய்ததுடன், 174 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.