ஊரடங்கு நாளில் தேயிலை பறிக்க உத்தரவு: பணிக்கு சென்ற 'டான்டீ' தொழிலாளர்கள் | நீலகிரி செய்திகள் | Dinamalar
ஊரடங்கு நாளில் தேயிலை பறிக்க உத்தரவு: பணிக்கு சென்ற 'டான்டீ' தொழிலாளர்கள்
Added : ஜன 24, 2022 | |
Advertisement
 
Latest district News

பந்தலுார்:ஊரடங்கு நாளிலும், அரசு தேயிலை தோட்ட நிறுவனமான, 'டான்டீ' தொழிலாளர்கள், பணிக்கு வர உத்தரவிடப்பட்டதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.அரசு தேயிலை தோட்ட நிறுவனமான, 'டான்டீ' தேயிலை தோட்டத்தில், ஊரடங்கு நாளான நேற்று தொழிலாளர்கள் பணி செய்ய உத்தரவிடப்பட்டது.தற்போது, நீலகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வரும் சூழலில், டான்டீ நிர்வாகத்தின் இந்த செயலால், தோட்ட தொழிலாளர் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இந்திய மஸ்துார் சங்க மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணியம் கூறுகையில்,''தொழிலாளர் நல சட்டப்படி இது முற்றிலும் தவறான செயல்பாடாகும்.டான்டீ கோட்ட மேலாளர்கள், தொழிலாளர்களை வற்புறுத்தி பணி செய்ய வைத்துள்ளனர். விடுமுறை நாட்களில் வேலை கொடுத்தால், மூன்று நாட்களுக்கான சம்பளம் வழங்க வேண்டிய நிலையில், ஊரடங்கு தினத்தில் விதிமுறை மீறியது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்புவோம். சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.'டான்டீ' நிர்வாக இயக்குனர் சீனிவாச ரெட்டி கூறுகையில்,''தேயிலை சார்ந்த தொழில் அத்தியாவசிய பட்டியலில் உள்ளதால், ஊரடங்கிற்கும், தேயிலை தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X