கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகத்தில் வன குற்றங்களை கண்டுபிடித்த, 'ஆப்பர்' என்ற 'பெல்ஜியம் ஷெப்பர்டு' மோப்பநாய், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 2020 மே 5ல் உயிரிழந்தது.தொடர்ந்து, கடந்த ஆண்டு, ஒன்றரை வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வாங்கப்பட்டு, 'டைகர்' என பெயரிடப்பட்டது. அதற்கு, ஹரியானா பஞ்சகுழா மாவட்டத்தில் உள்ள மோப்ப நாய் பயிற்சி மையத்தில், ஏழு மாதம் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.இந்த நாய்க்கு, பராமரிப்பாளர் வனகாப்பாளர் வடிவேல் தினமும் பயிற்சி அளித்து வருகின்றனர்.