தலை துாக்கும் 'போஸ்டர்' கலாசாரம்; சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜன
2022
06:02
பதிவு செய்த நாள்
ஜன 24,2022 03:20

அண்ணா சாலை : பொது இடங்களில் விதிமீறி போஸ்டர் ஒட்டப்படுவது அதிகரித்துள்ளது. அரசியல் போஸ்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல், மாநகராட்சியினர் திணறி வருகின்றனர்.'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் அடிப்படையில், சென்னையை அழகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னையின் அழகை சீர்குலைக்கும் விதமாக, பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.தொடர்ந்து, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், மீறி ஒட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, பொதுமக்களை கவரும் வகையில், தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, இயற்கை சார்ந்த ஓவியங்கள் மேம்பாலங்கள், அரசு அலுவலகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வரையப்பட்டு வருகின்றன.அரசின் இந்த நடவடிக்கை, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், போஸ்டர் கலாசாரம் மீண்டும் தலைத்துாக்க துவங்கியுள்ளது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, அனைத்து அரசியல்வாதிகளும், பொது இடங்களில் சென்னை அழகை சீர்குலைக்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.குறிப்பாக, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் எதிரே சாலை தடுப்பில், தடுப்பே தெரியாத அளவிற்கு சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. அரசியல் போஸ்டர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.இதை கவனத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
24-ஜன-202207:15:24 IST Report Abuse
Ram katchiyinarukku: naan kandikaramathiri pesuven athukkaga neengal banner poster adikaratha niruthakoodathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X