சென்னை : கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கடந்த வாரம் 25 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னை போலீசார், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஜனவரி 16 - 22 வரை நடத்திய சோதனையில், 25 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களிடம் இருந்து, 488 கிலோ குட்கா, 3 கிலோ மாவா, நான்கு ஸ்மார்ட் போன்கள், 17 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டன.போலீசார் கூறுகையில், 'கஞ்சா, குட்கா, மாவா என, போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொது மக்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து, அவசர போலீஸ் எண்: 100க்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றனர்.