புதுச்சேரி : புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் 49வது தேக்வாண்டோ கலர் பெல்ட் தேர்வு முகாம், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில், டிராகன் தேக்வாண்டோ மார்ஷியல் ஆர்ட் பள்ளி கிளை வீரர்களுக்கு பெல்ட் தேர்வு நடந்தது. 225 வீரர்கள் கலந்து கொண்டனர்இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழை, ரிச்சர்ட் எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்க நிறுவன செயலாளர் சிட்டிபாபு, டிராகன் தேக்வாண்டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளி செயலாளர் வினோத், சர்வதேச நடுவர் தினேஷ் குமார், பயிற்சியாளர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.