ஐஸ்ஹவுஸ் : திருட்டில் ஈடுபட்ட சலுான் கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், 21 சவரன் நகை, 1.60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.திருவல்லிக்கேணி, வெங்கடாச்சலம் 3வது தெருவைச் சேர்ந்தவர் சாரதி, 28. சில தினங்களுக்கு முன் வீட்டில் வைத்திருந்த, 21 சவரன் நகை, 2லட்சம் ரூபாயும் மாயமானது குறித்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், சாரதியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான சலுான் கடை நடத்தி வரும் சுமன் என்பவர் சமீபத்தில் அவரது வீட்டிற்கு சென்று, நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.தொடர்ந்து நேற்று அவரை கைது செய்த போலீசார், 21 சவரன் நகை, 1.60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.