விருத்தாசலம், : விருத்தாசலம் நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெயப் பிரகாஷ் நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: விருத்தாசலம் நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்ப்பவர்கள் உடனடியாக நகரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தவறினால், நகராட்சி மூலம் பிடித்து அகற்றி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதற்கான செலவினத்தை பன்றி உரிமையாளர்களிடம் இருந்தே வசூலிக்கப்படும்.