தாம்பரம் : தாம்பரம் -- வேளச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, புதிய மேம்பாலம் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்தும், நில ஆர்ஜித பணிகளே இன்னும் முடிவடையவில்லை.
இதனால், பொது மக்கள் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.தென் சென்னை பகுதியில் குடியிருப்புகள், நிறுவனங்களின் அதிகரிகப்பால், தாம்பரம் -- -வேளச்சேரி பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அச்சாலை ஆறு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. கால தாமதம்ராஜிவ்காந்தி சாலையில், ஐ.டி., நிறுவனங்கள் வருகையால் பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை, மேடவாக்கம், செம்பாக்கம், சேலையூர், கேம்ப் சாலை உள்ளிட்ட பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகின. இதனால், தாம்பரம் -வேளச்சேரி சாலையின், மேடவாக்கம் சந்திப்பு, கேம்ப் சாலை சந்திப்பு ஆகியவற்றில், வாகனங்களின் போக்குவரத்து, நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து, காலை, மாலை நெரிசல் நேரங்களில், குறிப்பிட்ட இடங்களை கடக்க கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.இதற்கு தீர்வாக மேடவாக்கம் சந்திப்பில், மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அதேநேரம், கேம்ப் சாலை சந்திப்பில், நெரிசலை தடுக்க வசதியாக அறிவிக்கப்பட்ட, புதிய மேம்பால பணிகளுக்கான, நில ஆர்ஜித பணிகளே, துவங்கப்படாமல் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், பி.விஸ்வநாதன், 63, கூறியதாவது:கடந்த 2015- - 16 மற்றும் 2017- - 18 ஆகிய இரண்டு ஆண்டுகளில், பள்ளிக்கரணையில் 1.8 கி.மீ., துாரமும், செம்பாக்கம் - கவுரிவாக்கம் இடையில், 2.25 கி.மீ., துாரமும் என, 4.05 கி.மீ., துாரத்திற்கு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.அதேபோல், 2018 - 19ம் ஆண்டில், மேடவாக்கம் - சந்தோஷபுரம் சாலையில், 1.35 கி.மீ., துாரத்திற்கு, ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.இந்த சாலைகளில், அந்த நான்கு ஆண்டுகளில், 25.37 கோடி ரூபாய்க்கு, மழை நீர் கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுகள் கட்டும் பணிகள், சாலை விரிவாக்கம் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் ஆகியவை நடந்துள்ளன.இச்சாலை சில இடங்களில், 45 மீட்டர் அகலமும், சில இடங்களில் 14 மீட்டர் அகலமும் உடையதாக உள்ளது. அதிலும், குறிப்பாக மகாலட்சுமி நகர் துவங்கி சேலையூர் காவல் நிலையம் வரை, சாலையின் அகலம் அதிகபட்சம் 14 மீட்டர் வரை மட்டுமே உள்ளது.இதன் காரணமாக ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க, சேலையூரில் உள்ள ஆல்பா பள்ளி துவங்கி, சங்கரா மேல்நிலைபள்ளி வரை, ஒரு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.வரை நில ஆர்ஜித பணிஇந்த மேம்பாலம், மாடம்பாக்கம் - ராஜகீழ்ப்பாக்கம், மகாலட்சுமி நகர், கேம்ப் சாலை ஆகிய பகுதிகளின் சிக்னல்களை இணைக்கும் விதமாக, அமையும்படி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக, மாநில நெடுஞ்சாலைத் துறையின், மெட்ரோ பிரிவு அதிகாரிகள், 2019ம் ஆண்டு ஆர்.டி.ஐ.,ல் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து இருந்தனர்.ஆனால், இரண்டு ஆண்டுகளை கடந்தும், இன்று வரை திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளே முடியாமல் உள்ளன. இத்திட்டம் அடிப்படையில் தாமதமாவதற்கு, நில ஆர்ஜித பணிகள் மட்டுமின்றி, அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் முக்கியமான காரணமாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மேம்பால திட்டத்திற்கு தேவையான நிலங்கள் எடுப்பது குறித்து, ௨௦௧௯ல் தான் நிர்வாக ஒப்புதல் கிடைத்து, அதற்கான, ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் அப்பணிகள் முடிவடையவில்லை.மேடவாக்கம் பாலப் பணிகள் துவங்கி ஐந்தாண்டுகளான நிலையில், அந்த பகுதியிலேயே தற்போது வரை நில ஆர்ஜித பணிகள் முடியவில்லை. இந்நிலையில், சேலையூரில் அமைய உள்ள மேம்பாலத்திற்கான நில ஆர்ஜித பணிகள் எப்போது முடியும் என, எங்களால் சரிவர கூற முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நடவடிக்கை தேவைதாம்பரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,
வெளி மாவட்டங்களில் இருந்து, வந்து குடியேறுபவர்கள், தொழில் நிமித்தமாக, சென்னைக்கு வருபவர்கள், ஜி.எஸ்.டி., சாலைக்கு பதிலாக, தாம்பரம் -- வேளச்சேரி சாலையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், அதிகரித்துள்ள வாகன போக்கு வரத்திற்கேற்ப, தேவைப்படும் இடங்களில், சாலையை விரிவாக்கம் செய்வது, மேம்பாலம் கட்டுவது ஆகிய பணிகள் அவசியமாகி உள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலை விரிவாக்கம், மேம்பாலம் கட்டுவது ஆகியவற்றிற்கான, நில ஆர்ஜித பணிகளிலேயே, ஆரம்ப நிலையை கடக்காமல், அசட்டையாக உள்ளனர். அரசு தலையிட்டு, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சமூக ஆர்வலர்கள்.