செங்கல்பட்டு : பரனுார் மேம்பாலத்தில், தடுப்பு சுவர் சேதமடைந்து இருப்பதால், வாகனம் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பஸ், கார், வேன், லாரி, ஆட்டோ என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
கால்வாய், விபத்து நடக்கும் இடங்களில் சாலையோரம் தடுப்பு அமைக்கப்படும். செங்கல்பட்டு அடுத்த பரனுாரில் இருந்து டோல்கேட் செல்லும் மேம்பாலம் அருகே, சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த தடுப்புச்சுவரில், வாகனங்கள் அவ்வவ்போது மோதி விபத்துக்குள்ளானதால், ஆங்காங்கே தடுப்பு உடைந்துள்ளது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள், பின்னால் வரும் வாகனங்களுக்கு, வழிவிட்டு ஒதுங்கி செல்ல முற்படும்போது விபத்தில் சிக்குகின்றனர். சாலையோரம் உடைந்துள்ள தடுப்புச்சுவரை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.