அச்சிறுப்பாக்கம் : தேசிய நெடுஞ்சாலை ஆத்துார் சுங்கச்சாவடியில் பராமரிப்பு பணி முறையாக மேற்கொள்ளப்படாததால் குப்பை கொட்டி துர்நாற்றம் வீசுகிறது.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட எல்லை முடிவில், அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடி உள்ளது.மலைபோல் குப்பைஇதன் அருகே, டீ, காபி, உணவு பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கி வருகின்றன.
இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இந்தக் கடைகளில் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர்.அவர்கள் குடிக்கும் டீ கப், பிஸ்கட் பேப்பர் மற்ற உணவு வகைகள், குப்பை தொட்டிகளில் போடாமல் சாலையோரம் வீசி செல்கின்றனர்.கடைக்காரர்களும், நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமும், இந்த குப்பையை தினம் அகற்றுவது இல்லை. இதனால், சாலையின் இருபுறமும் மலைபோல் குப்பை குவிந்து, துர்நாற்றம் வீசுகிறது.வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மூக்கைப் பிடித்து, முகத்தை சுளித்தபடி செல்கின்றனர்.
நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், சாலைகளை துாய்மைப்படுத்துதல், மரக்கன்றுகளை பராமரித்தல்.மின்விளக்குகள் பராமரித்தல், விபத்து ஏற்பட்டால் வாகனங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இவற்றை செய்வதில்லை.கோரிக்கைஇதனால் மதுராந்தகம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு வரை சாலையோரங்களில் குப்பை குவியல் அதிகம் காணப்படுகிறது.கழிவுகளை அகற்றி, தேசிய நெடுஞ்சாலையை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.