புதிய கருவூல கட்டடத்திற்கு இணையதள இணைப்பு வழங்குவதில் தாமதம் ... திண்டிவனத்தில் திறப்பு விழா நடந்தும் பயன்பாட்டிற்கு வராத அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2022
04:33

திண்டிவனம், : திண்டிவனம் கிளைச்சிறை அருகே ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்த சார்நிலை கருவூல கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது.திண்டிவனம் தாலுகா அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில், கருவூலம் செயல்பட்டு வருகிறது.

அரசின் கணக்கு, வழக்குகள் அனைத்தும் நிர்வகிக்கும் இடமான கருவூலம் பல ஆண்டுகளாக இடப்பற்றாக்குறை உள்ள இடத்தில் செயல்பட்டு வருவதால், அலுவலகத்திற்கு பக்கத்தில் கிளைச்சிறைக்கு அருகே ஒரு கோடி ரூபாய் செலவில், புதியதாக சார் கருவூல அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.இந்த புதிய கட்டடத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி, அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்து 3 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கருவூலம் பழைய கட்டடத்திலேயே செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது.புதிய கட்டடத்திற்கு இணையதளம் இணைப்பு கொடுக்கப்படாமல் இருப்பதால், பழைய கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்திற்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

தற்போதுள்ள கருவூலத்தின் இணையதளம் தாலுகா அலுவலக இணையதள இணைப்பில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.கருவூலத்திற்கென தனியாக இணையதளம் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளதால், இணையதள இணைப்பிற்கான கட்டணத்தை தாலுகா அலுவலகமே செலுத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி கருவூலம் செல்படுவதால் தாலுகா அலுவலகத்திலும் இடம் பற்றாக்குறை உள்ளது. புதிய கருவூல கட்டடம் செயல்பாட்டிற்கு வந்தால் தாலுகா அலுவலகத்திற்கும் போதிய அளவில் இடம் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.

புதிய கட்டடத்திற்கு சார்நிலை கருவூலம் மாற்றப்பட்டு விட்டால், திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கு கூடுதலாக இடம் கிடைக்கும்.இதற்காகவாவது புதிதாக கட்டடப்பட்டுள்ள சார்நிலை கருவூலத்திற்கு இணையதளம் இணைப்பு கொடுத்து, புதிய கட்டடத்தில் அலுவலகம்செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X