அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் 41 அடி உயர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.அவலுார்பேட்டை கிராமத்தில் ஆதிகான் புரவடை - புதுப்பூண்டி தாங்கல் ஏரிப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கங்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிேஷக விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை நடந்து கடம் புறப்பாடாகி கோவிலில் அமைக்கப்பட்ட 41 அடி உயரமுள்ள சர்வ சக்தி காளிஅம்மன், சுயம்பு அங்காளம்மன், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.