வானுார் : துருவை கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.வானுார் அடுத்த துருவை கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா சதீஷ்குமார், ஊராட்சித் தலைவர் அன்பழகி மணிபாலன், துணைத் தலைவர் லதா சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.