திண்டிவனம் : திண்டிவனத்தில் அன்னை சாரதா தேவி, விவேகானந்தர் பக்தர்களின் கூட்டம் நடந்தது.திண்டிவனத்தில் ராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 29ம் மாநில மாநாடு கடந்த மாதம் 28ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை நடந்தது.
இந்த மாநாட்டில் பங்கேற்று பல்வேறு உதவி புரிந்தவர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம், திண்டிவனத்தில் நடந்தது.சென்னை, மயிலாப்பூர் மகராஜ் சத்தியானந்த் தலைமை தாங்கினார். திண்டிவனம் சாரதாதேவி சேவா அறக்கட்டளைத் தலைவர் ஸ்ரீராஜீலு வரவேற்றார். செயலாளர் ரவிச்சந்திரன் அறிக்கை வாசித்தார். குமார் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார்.நிகழ்ச்சியில் மாநாடு வெற்றி பெற பணியாற்றிய பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார் மற்றும் சிவக்குமார், தேவிகா, பாபு, ரவிச்சந்திரன், சுந்தரம், கிருபாகரன், சிவஞானம், பழனிராமன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.