முழு ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீஸ் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2022
04:59

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் பயணிகளுக்காக அனுமதி வழங்கியுள்ள ஆட்டோ, டாக்சி வாகனங்கள் கூடுதல் கட்டணம் பெறக் கூடாது போலீசார் அறிவுறுத்தினர்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடந்த 9ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2 வாரங்களாக, ஊரடங்கில் எந்த வாகனங்களுக்கும் அனுமதி வழங்காமல் இருந்த நிலையில், நேற்று முழு ஊரடங்கில் பயணிகள், மக்களை ஏற்றிச் செல்லும் டாக்சி, ஆட்டோ செல்ல அரசு அனுமதியளித்துள்ளது.இதையொட்டி, ரயில் நிலையத்தில் பயணிகள் செல்லும் ஆட்டோ, டாக்சி ஆகியவற்றில் நிர்ணயிக்கபட்ட கட்டணத்தை மட்டுமே பெற போலீசார் மூலம் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் சங்கத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார்.அதன் பேரில், போலீசார், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்திற்கு கட்டண விபரம் குறித்து அறிவுரை வழங்கினர்.நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஓட்டுநர்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் துறை தொலைபேசி 04146 222172, 9498181229 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X