விழுப்புரம், : வளவனுார் அருகே வயிற்று வலியால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.வளவனுார் அடுத்த பூவரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் ராஜசேகர், 31; கொத்தனார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்.நேற்று முன்தினம் வலி அதிகமாகியதால் மனமுடைந்த அவர், வீட்டில் துாக்கு போட்டு கொண்டார். உடன் அவரை குடும்பத்தார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.