விழுப்புரம் : மகளைக் காணவில்லை என தாய் விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த சென்னாகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது 17 வயது மகள் டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு, மெடிக்கல் கடையில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.இவரை கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.