விழுப்புரம் : கொத்தனார் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கீழ்முத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ், 42; கொத்தனார். இவர், கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாததால், இவருக்கும், மனைவி லட்சுமி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.இதனால், கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்து சென்ற முருகதாஸ், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.