மரக்காணம் : மரக்காணம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.மரக்காணம் அடுத்த முருக்கேரி உசேன் நகரைச் சேர்ந்த கோதண்டராமன் மனைவி ரேவதி, 54; இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கோதண்டராமன் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.