சிதம்பரம், : சிதம்பரம் அருகே, காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த மயிலை மீட்ட கிராமத்தினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வெள்ளூர் கிராமத்தில் நேற்று காலை, காலில் காயமடைந்த மயில் புளிய மரத்தில் இருந்து பறக்க முடியாமல் கீழே விழுந்தது. அப்பகுதி மக்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.பின், வெள்ளூர் ஊராட்சித் தலைவர் பிரபு அளித்த தகவலின் பேரில், சிதம்பரம் வனத்துறையினர் சென்று மயிலை மீட்டு மருத்துவ சிகிச்சையளித்தனர். காயம் சரியானவுடன் காப்புக் காட்டில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.