புதுச்சேரி : தவளக்குப்பத்தில் டார்லிங் டிஜிட்டல் உலகத்தின் 112வது கிளை திறப்பு விழா நடந்தது.தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் டார்லிங் டிஜிட்டல் உலகம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தவளக்குப்பத்தில், கடலூர் மெயின் ரோட்டில், 112வது கிளையை அமைத்துள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம் கிளையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரமூர்த்தி முன்னிலை வகித்தார். வேர்ல்புல் கிளை மேலாளர் ராஜமுருகன், ஓட்டல் காமாட்சி உரிமையாளர் அக்கேஷ்ராஜ், ஆறுமுகம் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.ஷோரூமில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழா சலுகையாக நேற்று மட்டும் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கும், முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஜார் மிக்சி இலவசமாக வழங்கப்பட்டது.10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கிய முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் சூடுபடுத்தும் எலட்ரீக் கெட்டில் வழங்கப்பட்டது.நிபந்தனைகளுக்குட்பட்டு, பஜாஜ் பைனான்ஸ் மூலம் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத தவணை கேஷ்பேக் ஆபர் அளிக்கப் படுகிறது.ரூ.30 ஆயிரத்திற்கு மேல் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 உடனடி கேஷ் பேக் வசதி செய்யப்பட்டுள்ளது.