மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் 565 பேருக்கு கொரோனா பாதித்து 4795 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று 622 பேருக்கு பாதித்து 4816 பேர் சிகிச்சையில் இருந்தனர். மதுரையில் கொரோனா அதிகரிக்கும் வேகத்தை விட குறைவதற்கு தயக்கம் காட்டி வருகிறது.
நேற்று முன் தினம் 649 பேரும், நேற்று 602 பேரும் குணமாகினர். 2198 ஆக்ஸிஜன் படுக்கைகளில் 327, 940 ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைகளில் 120, 676 ஐ.சி.யூ., படுக்கைகளில் 83 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்மதுரையில் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கில் ஓரளவு மக்கள் கூட்டம் இல்லாததால் தொற்றும் ஆயிரத்தை நெருங்காமல் தினமும் 600 - 750க்குள் நீடிக்கிறது.
இதோடு தமிழக அரசின் கிருமிநாசினி, சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்றினால் வரும் வாரங்களில் தொற்று குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.