மதுரை : மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகளால் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாடப்பட்டது.
* ஜான்சிராணி பூங்கா நேதாஜி சிலை வளாகத்தில் முப்பெரும் விழா நடந்தது. சமூக ஆர்வலர் சுவாமிநாதன், போஸ் சிலைக்கு மாலை அணிவித்தனர்.முன்னாள் விமானப்படை வீரர் வேலுச்சாமி, ராணுவ வீரர் மாரிமுத்து, காந்தி சிலை கமிட்டி தலைவர் சாமிகாளை, பேராசிரியர் தேவதாஸ், சமூக ஆர்வலர் பாலா, வழக்கறிஞர் ஆறுமுகம், ஜெ.சி.ஐ., அமைப்புபட்டய தலைவர் ரத்தீஷ் பாபு, நிர்வாகிகள் குமாரவேல், செந்தில் நாதன், ராஜகோபால், சிவாஜி குரூப்ஸ் நிர்வாகிகள்,லயன்ஸ் சங்க செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* பிறந்தநாள் விழா இணைய வழி பட்டிமன்றம் ஒண்டரிங் மைன்ட்ஸ் அமைப்பு சார்பில் நடந்தது. டேனியல், அமைப்பு பொருளாளர்சக்தி தமிழ், நிர்வாகிகள் கவிபாரதி அழகுவேல், வினோத் ஹேமலதா, பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
* கரிமேடு சிலைக்கு காங்., வர்த்தக பிரிவு செயலாளர் வேல்பாண்டி, அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லைபாலு உள்ளிட்டோர் மாலையணிவித்தனர். ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.உசிலம்பட்டி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் தாளாளர் பாண்டியன் தலைமையில் விழா நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, முதல்வர் ரவி, நிர்வாக குழு உறுப்பினர் உதயபாஸ்கரன், சிறப்பு அழைப்பாளர் சுந்தரவந்தியத்தேவன், பி.கே.எம்., அறக்கட்டளை செயலாளர் ராஜா, துணை தலைவர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயற்கை வள பாதுகாப்பு குழுவினர் செய்தனர்.