திருமங்கலம், : கப்பலுார் ஆட்டோ மொபைல் தொழிற்பேட்டையில் போதிய தெருவிளக்குகள் இல்லாத நிலையில், ஆட்டோமொபைல் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் ரூ. 4 லட்சம் செலவில் 10 சூரிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
மேலும் தொழிற்பேட்டையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மைய மேலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் பொன் விக்ரம் முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.