நெல் அறுவடைக்கு பின் பயிறு விவசாயிகளுக்கு யோசனை | மதுரை செய்திகள் | Dinamalar
நெல் அறுவடைக்கு பின் பயிறு விவசாயிகளுக்கு யோசனை
Added : ஜன 24, 2022 | |
Advertisement
 

மேலுார் : மேலுார் வட்டாரத்தில் நெல் அறுவடைக்கு பின்பு பயிறு வகைகளை விவசாயிகள் பயிரிடலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.



அவர் கூறியுள்ளதாவது: இந்த வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 10 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல் சாகுபடி செய்தால் வயல்களில் மண் வளம் குறைந்து பூச்சி, நோய் தாக்குதல் அதிகரிக்கும். குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக லாபம் பெற நெல் பயிர் அறுவடை செய்த நிலத்தில் உளுந்து, பாசிப் பயறு போன்ற பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 8 முதல்- 10 கிலோ விதையை 200 கிராம் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள் மற்றும் 100 கிராம் சூடோமோனஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பின் 15 நிமிடங்கள் கழித்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் வயல்களில் விதைக்கலாம். உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்து பயிரின் லம் நிலை நிறுத்தப்படுகிறது. உளுந்து பயிரில் உள்ள வேர் முடிச்சுகள் மூலம் மண்ணில் உள்ள சத்துகள் நிலைநிறுத்தபடுவதுடன் நெல் பயிரை தாக்கும் பூச்சி நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது பயறு வகைகளின் விலை உயர்ந்தும் சாகுபடி செலவு குறைவாகவும் உள்ளதால் பயறு வகைகளை பயிரிட்டு வருமானத்தை பெருக்கிடலாம் என கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X