மகசூல் குறைவால் விவசாயிகள் தவிப்பு; நிவாரணம் வழங்கப்படுமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2022
07:35

மேலுார் : மேலுார் பகுதியில் பெய்த தொடர் மழையால் நெற் பயிர் மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.



ஒருபோக பாசன பகுதியில் உள்ள 86 ஆயிரம் ஏக்கருக்கு ஆக.,11ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்நாள் முதல் தொடர் மழை பெய்த நிலையில் தற்போது கதிர் அறுவடை நடக்கிறது. ஏக்கருக்கு 35 -- 40 மூடை நெல் மகசூல் வர வேண்டிய நிலையில் குறைந்தளவு கிடைப்பதால் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர்.

விவசாயி ஜெயராமன்:- வங்கி கடன் வாங்கி செலவு செய்த நிலையில் ஏக்கருக்கு 15 மூடைகள் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. அதனால் ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மகசூல் பாதிப்பு குறித்து காப்பீடு மற்றும் வேளாண் துறையினர் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இயற்கை இடர்பாட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் ரூ. 405 செலுத்தினால் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்பதால் காப்பீடு செய்துள்ளோம்.

இந்தாண்டு மகசூல் பாதித்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு இடு பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றார்.வேளாண் உதவி இயக்குனர் செல்வி: -பயிர் காப்பீடு திட்ட பணியாளர் மூலம் மகசூல் பாதிப்பு குறித்து அறிக்கை அனுப்பபட்டுள்ளது. 7 ஆண்டுகளில் கிடைத்த மகசூலுடன் கணக்கீடு செய்து பாதிப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X